திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருகோணமலைக்குச் கொண்டு சென்ற ஒரு தொகை உபயோகத்திற்கு உதவாத பொருட்களை இன்று(12) கைப்பற்றியதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு லொறியொன்றில் கொண்டு சென்ற போதே அக்போபுர இராணுவ சோதனை சாவடியில் வைத்து கைப்பற்றியதாகவும்,இதனை கொண்டு சென்ற போதே லொறியின் சாரதியையும்,உதவியாளரையும் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த லொறியில் பாவனைக்குதவாத உலருணவுப் பொருட்களான மாவு,பருப்பு,சோயாமீட் மற்றும் மாசிப் பொருட்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சோதனை நடவடிக்கையினை பொலிஸாரின் அனுமதியுடன் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் இச்சோதனைகள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
