அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிகவும் பின்தங்கிய கிராமங்களான மண்டானை மற்றும் காயத்திரிகிராம மக்களுக்கு நேற்று-11- சனிக்கிழமை ஒருதொகுதி உலருணவு 150 நிவாரணப்பொதிகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் முன்னிலையில் வழங்கிவைக்கப்பட்டன.
பிரித்தானியா 'அன்னை சிவகாமி அறக்கட்டளை' அமைப்பின் கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் ஜந்தாம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் மண்டானை மற்றும் காயத்ரி கிராமத்தில் வழங்கிவைக்கப்பட்டது.
அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் யாழ்.பல்கலைக்கழகமாணவன் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமாரின் ஏற்பாட்டில் அப்பகுதி ஆலயங்களில்வைத்து இவ் உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
நிகழ்வில் திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் உதவிபிரதேசசெயலாளர் க.சதீஸ்கரன் காரைதீவுபிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் அமைப்பின் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா கோரக்கர் பிள்ளையார் ஆலயத்தலைவர் எஸ்.மோகன் கோரக்கர்கிராம பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் சோ. தினேஸ்குமார் அப்பகுதி சமுகசெயற்பாட்டாளர் டிலக்ஷினி திருக்கோவில் சமுகசெயற்பாட்டாளர் இரா.சயனொளிபவன் மற்றும் கிராமசேவையாளர் திட்டஉத்தியோகத்தர் உள்ளிட்டோர் நிவாரணப்பொதிகளை வழங்கிவைத்தனர்.
தனது அன்னையின் பேரால் கடந்த 10வருடங்களாக சமுகசேவயாற்றிவரும் மகாதேவன் சத்தியருபன் (லண்டன்) என்பவரின்நிதியொதுக்கீட்டிலேயே இவ்வுதவி இம் மக்களுக்கு கிடைத்துள்ளது.
ஏலவே கல்விமற்றும் சமுக செயற்பாட்டாளர் இணைப்பாளர் சோ வினோஜ்மாரின் ஏற்பாட்டில் லண்டன் சைவமுன்னேற்றச்சங்கம் சுவிஸ் மூரிச் அன்பேசிவம் பிரிட்டன் சிவகாமி அறக்கட்டளை நிதியம் போன்ற அமைப்புகளால் அம்பாறை மாவட்டத்திலுள்ள வளத்தாப்பிட்டி பளவெளி அட்டப்பள்ளம் காரைதீவு வீரச்சோலை ஆகிய பகுதிகளில் உலருணவு நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












