நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையினை தொடர்ந்து மலையக பகுதிகளுக்கு கொழும்பு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பல்வேறு வழிகளில் அதிக பணம் செலுத்தி மலையக பகுதிகளை நோக்கி வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இவ்வாறு வருபவர்கள் தங்களது குடும்பம் மற்றும் சமூக பாதுகாப்பினை கருத்தில் கொண்டு உரிய முறையில் பொலிஸாருக்கு அறிவுறுத்தி சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு பிரிடோ நிறுவனம் மலையக இளைஞர்கள் யுவதிகளிடம் வினையமாக கேட்டுக்கொண்டுள்ளது.
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு கொரோனா நோய்த் தடுப்பு தொடர்பான அரசு பணிகள் முழுமையாக வந்தடையாத நிலையில் பிரிடோ நிறுவனம் தமது பணிப் பகுதிகளில்; பொலிஸ் நிலையங்களின் பங்களிப்போடு 'வீட்டுக்கு வீடு விழிப்புணர்வு' என்ற தொனிப்பொருளில் ஒவ்வொரு வீ;ட்டுக்கும் சென்றடையக் கூடிய வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதன்போது ஒவ்வொரு வீட்டிற்கும் விழப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
நோய் தடுப்பு , பாதுகாப்பு போன்ற தகவல்களுடன் நோய் பரவுவதை தடுக்கும் நோக்கத்துடன் வெளியிடங்களில் இருந்து தோட்டங்களுக்கு வருபவர்கள் குறித்து தகவல் வழங்குமாறு மக்கள் கேட்கப்பட்டதுடன் பொலிஸ் நிலையம் மற்றும் பிரிடோ நிறுவனம் ஆகியவற்றின் தொலைபேசி இலக்கங்களும் கொடுக்கப்பட்டன.
இந்த பின்னனியில் கடந்த ஒரு சில நாட்களாக தோட்டங்களுக்கு கொழும்பு போன்ற இடங்களில் இருந்து வந்தவர்கள் குறித்த தகவல்களை அந்த அந்த தோட்டங்களில் உள்ள சமூகஅபிவிருத்திக் குழுவினரும், நலன் விரும்பிகளும் பிரிடோ நிறுவனத்திற்கு வழங்கி வருகிறார்கள்.
இந்த தகவல்கள் கிடைத்தவுடன் அந்த தகவல்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு வெளியிடத்திலிருந்து வந்தவரினதும் அவரது குடும்பம் சூழவுள்ள சமூகம் என்பவற்றை பாதுகாக்கும் நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதே வேளையில் கொழும்பில் இருந்து நபர்கள் வெளியிடங்களுக்கு செல்வதை அரசாங்கம் தடைசெய்திருக்கும் பின்னனியில் சிலர் தோட்டங்களுக்கு எவ்வாறு திரும்பி வருகிறார்கள் என்பதை விசாரித்த போது அவர்கள் கொழும்பு அல்லது மற்ற நகரங்களிலருந்து அத்தியாவசிய சேவைக்காக வரும் லொறிகள் அல்லது வாகனங்களுக்கு பெருந்தொகையான பணத்தை செலுத்தி யாருக்கும் தெரியாத முறையில் வந்து சேர்வதாக அறியமுடிகிறது.
சிலர் கொழும்பில் இருந்து மலையக பகுதிகளுக்களுக்கு வருவதற்கு இரண்டாயிரம் முதல ;ஐந்;தாயிரம் வரையில் பணம் செலுத்துவதாக தெரியவருகிறது.
பல நாள் காத்திருந்த ஒருவர் அவ்வாறு பயணம் செய்ய பத்தாயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் அறியமுடிந்தது.
இவ்வாறு செய்வதன் மூலம் நோய் பரவாத இடங்களுக்கு நோய் பரவுவதை தடுக்கு அரசாங்கம் எடுத்து வரும் பெரும் முயற்சிகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும்.
பொதுவாக பார்க்கும் போது இந்த வியாபாரம் மலையக பகுதிகளில் மட்டுமல்லாது மற்ற பகுதிகளிலும் நடந்து கொண்டிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
ஏற்கனவே நெருக்கடியாக சூழ்நிலையில் இருக்கும் போலிஸ் உத்தியோகத்pதர்களுக்கு இது மேலதிக வேலையாக இருந்தாலும் இதனை செய்யாவிட்டால் நோய்பரவாமல் இருக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு இது பாரிய தடையை ஏற்படுத்தும்.
அத்தோடு இது ஒரு மனிதாபிமான பிரச்சனை என்பதால் கொழும்பு போன்ற இடங்களில் இவ்வாறு இக்கட்டான சூழலில் இருப்பவர்களின் தேவைகளை கவனிக்கவும் விசேடமாக அவர்களின் உளவள ஆற்றுப்படுத்தலுக்குமான நடவடிக்கைகளை அரசாங்கமும் கொழும்பிலுள்ள சமய நிர்வனங்களும், வேறு அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரிடோ நிறு;வனம் வேண்டுகோள் விடுக்கிறது. இது அவர்களுக்கு மட்டுமின்றி முழு நாட்டு மக்களுக்கும் செய்யும் சேவையாகவே கருதப்படும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை பொகவந்தலா பகுதியில் தெளிவு படுத்தலின் பின் பலர் வந்து பொலிஸாருக்கு அறிவுறுத்தல்களை பின் பற்றிவருவதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது மிகவும் வரவேட்கப்பட வேண்டிய விடயமே எனவே இது போன்று ஏனைய பிரதேசங்களில் வாழ்பவர்களும் இவ்வாறு செய்வதன் மூலம் நாம் கொரோனா தொற்றிலிருந்து விடுபடாலம் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.
