சாய்ந்தமருது பள்ளிவாசல் சமூகத்திடம் யாஹ்யாகானின் அன்பானதும் அவசரமானதுமான வேண்டுகோள்!!!


@ . கொவிட் 19 கொரோனா, சாய்ந்தமருது நிதியம் ஒன்றை விரைவாக உருவாக்குங்கள்.

@ . தனவந்தர்கள், வசதிபடைத்தவர்கள் மற்றும் தேர்தலில் களமிறங்கவுள்ளோர் போன்றோரிடம் நிதியை திரட்டுங்கள்.

@ . திரட்டப்படும் மொத்த நிதிக்கு சமனான பங்கு நிதியை நானும் பங்களிப்புச் செய்கிறேன்.

@ . தேவையுடைய அனைத்து மக்களுக்கும் விரைவாக உதவுங்கள்.  


ற்போது கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக உலகே ஆட்டம்கண்டுவரும் இந்தசந்தர்ப்பத்தில் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் பல்வேறு தனிமைப்படுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அந்த அடிப்படையில் நாட்டில் ஆங்காங்கே பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கச்சட்டத்தின் காரணமாக அன்றாடம் கூலிவேலைசெய்து தாங்களது ஜீவனோபாயத்தை நாடாத்திச் சென்ற பலர் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர்.

இவ்வாறன சூழலில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாது என்ற அடிப்படையில் நான் கொழும்பில் தங்கியிருகின்ற போதிலும் எனது தாயகமான சாய்ந்தமருது மண்ணில் வாழும் கஷ்ட்ட நிலையில் உள்ள மக்களும் எனது பிரதிநிதிகளைக்கொண்டு முடியுமான உதவிகளை செய்து வருகின்றேன்.

அன்றாடம் எனக்குக்கிடைக்கும் தகவல்கள் மிகுந்த வேதனையளிக்கின்றன. ஆகக்குறைந்தது நான் பிறந்த சாய்ந்தமருதில் வாழும் தேவையுடைய மக்களுக்காவது உதவ வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

அரசியல், கட்சி என்ற வரையறைகளை எல்லாம் ஒருபக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு சாய்ந்தமருது பள்ளிவாசலின் தலைமைத்துவத்தின் கீழ் சாய்ந்தமருதில் இருக்கும் தனவந்தர்கள், வசதிபடைத்தவர்கள் மற்றும் தேர்தலில் களமிறங்கவுள்ளோர் என அனைவரும் ஒன்றுபட்டு வறுமையில் வாடும் மக்களுக்கு தாங்களால் முடிந்த அத்தனை உதவிகளையும் வழங்க முன்வரவேண்டும்.

ஒருபகுதியினர் வறுமையில் தத்தளிக்கும்போது நாங்கள் சுகபோகமாக வாழ்வது என்பது நீதியாகாது. சாய்ந்தமருது பள்ளிவாசல் மக்களுக்கு உதவும் திட்டத்தை விரைவாக ஆரம்பிக்கவேண்டும். தற்போது பள்ளிவாசலினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மகல்லா ரீதியான நடைமுறை வெற்றியளிக்கப்போவதில்லை எனவே ஊரில் உள்ள தனவந்தர்கள் மற்றும் தேர்தலில் களமிறங்கவுள்ளோரை பட்டியலிட்டு அவர்களிடம் உதவிகளைப்பெறுங்கள். சாய்ந்தமருதில் திரட்டப்படும் மொத்த உதவி எவ்வளவோ அதேஅளவான உதவியை நான் வழங்க தயாராய் இருக்கின்றேன் என்பதையும் பள்ளிவாசலுக்கும் சாய்ந்தமருது மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களது அழைப்புக்காக காத்துக்கொண்டிருக்கின்றேன்.

அன்புடன்
அல் ஹாஜ் ஏ.சி.யஹ்யாகான்,
பிரதிப் பொருளாளர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -