மாகாண கல்வித்திணைக்களம் பெற்றோருக்கு விடுக்கும் வேண்டுகோள் .


எப்.முபாரக்-
ல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் மாணவர்களுக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்ளாத மாணவர்களின் பெற்றோர் பாடசாலை அதிபர், ஆசிரியர், வலயக்கல்வி அலுவலகம், மாகாணக் கல்வித்தணைக்களத்துடன் தொடர்பு கொள்ளவும் என கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்:

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 5, க.பொ.த.சாதாரண தரம், க.பொ.த.உயர் தரம் ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் தொடர்பில் மாகாண கல்வித் திணைக்களத்தினாலும், வலயக் கல்வி அலுவலகங்களினாலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கபபட்டு வருகின்றன.
இதுவரையில் இச் சேவைகளைப் பூரணமாக தங்கள் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால் தங்களுடைய வகுப்பாசிரியருடனோ, அதிபருடனோ, அல்லது வலக்கல்விப் பணிப்பாளருடனோ தொடர்பு கொண்டு இது தொடர்பான விபரங்களைப் பெற்று பிள்ளையின் கல்வியை விடுபடாமல் நடைபெறுவதற்குரிய ஏறபாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -