சவளக்கடை ரெயின்வோ விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தினால் அன்றாட இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்ட சாளம்பைக்கேணி-05 கிராம மக்களுக்கு ஒருவேளை சாப்பாடு வழங்கும் நோக்கில் பகல் உணவு சமைத்து இன்று சனிக்கிழமை வீடு வீடாக கொண்டு சென்று மக்களுக்கு வழங்கினார்கள்.
ரெயின்வோ விளையாட்டுக் கழகத்தின் சகல உறுப்பினர்கள் தங்களின் நிதியிலிருந்து கிராமப்புர மக்கள் நாளாந்தம் கூலி தொழில் செய்து அன்றாட ஜீவனோபாயத்தை பெறும் குடும்பங்க பாதிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து இக்கிராமத்திலுள்ள 180 குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஒருவேளை உணவினை பொதி செய்து ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வழங்கினர்.
ரெயின்வோ விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ.எல்.எம்.நிஸார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சவளக்கடை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி றம்சீன் பக்கீர் சமைத்த உணவை குடும்பங்களுக்கு வழங்கி ஆரம்பித்து வைத்தார்.
இதில் அல்-மஸ்ஜிதுல் நூராணியா பள்ளிவாசல் இமாம் செய்யதுல் ஜிப்ரி மௌலானா, மஸ்ஜிதுல் நூராணியா பள்ளிவாசல் தலைவர் ஏ.நௌபீர், மஸ்ஜிதுல் தௌபத்துல் ஹக் பள்ளிவாசல் தலைவர் யூ.எல்.சித்தீக், சவளக்கடை பொலிஸ் உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.