சார்வரி வருட புதிய வருடப்பிறப்பு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இரவு 7.26 க்கும் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இரவு 8.23 க்கும் பிறந்துள்ளன.இந்த சார்வரி வருடத்தினை வரவேற்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட சித்திரைப்புத்தாண்டு விசேட பூஜை ஆலய பிரதமகுரு பிரம்மஸ்ரீ சந்திரானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
விநாயகர் வழிபாடு விசேட அபிசேகப் பூஜை சித்திரைப்புத்தாண்டு பூஜை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டியும் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பேரிடரிலிருந்து உலக மக்களை காக்க கோரியும் விசேட பிரார்த்தனை ஒன்றும் இடம்பெற்றது.
தற்போது நாட்டில் தனிமைப்படுத்தும் சட்டம் அமுலில் இருப்பதால் ஆலயத்தைச்சேர்ந்த குருக்கள் உட்பட ஒருசிலர் மாத்திரமே கலந்து கொண்டதுடன் இவர்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய பூஜைவழிபாடுகளில் ஈடுபட்டமையும் குறிப்படத்தக்கது.
பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பக்த அடியார்களுக்கு கைவிசேடமும் பிரசாதமும் வழங்கப்பட்டன.