கொட்டகலை நகர்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் வௌ;வேறு விலகளில் பொருட்கள் விற்பனை செய்வதாக வெளியான தகவல்களை அடுத்து நிர்னைய விலையில் பொருட்களைவ விற்பனை செய்யநடவடிக்கை எடுத்திருப்பதாக கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.
கொட்டகலை நகரத்தில் அதி கூடிய விலையில் பொருட்கள் விற்று அதிக லாபம் பெருவதாக சில காலங்களாக சமூக வலைத்தளங்களில் வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வர்த்தக சங்கத்தின் செயற்குழு கூட்டம் வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் நேற்று (13) திகதி கூடியது.
கொட்டகலை முத்து விநாயகர் தேவஸ்தான பிரதான மண்டபத்தில் அரச சட்ட விதிகளுக்கு அமைவாக நடைபெற்றது. இந்த ஒன்று கூடல் நடைபெற்றது. இதில் 01 அரச கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள,; விட்கபடவேண்டும் 02.விலை பட்டியல் காட்சி படுத்தப்பட வேண்டும்., 03.பொருடகள் பதுக்கப்படகூடாது, 04 கொள்வனவின் போது ரசீது கொடுக்கப்பட வேண்டும,; 05 இச்சட்டங்களை மீருவோருக்கு எதிராக கடையின் பெயருடண் துண்டு பிரசுரம் வினியோகிக்கப்படும்.
குறித்த கலந்துரையாடலில் அரச கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் பெற்றுக்கொள்ள முடியாது என்று வர்த்தகர்கள் தெரிவித்ததன் காரணமாக இன்று அரச கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் விற்பனைக்கு பெற்றுதறுவது சம்பந்தமாக மாவட்டச் செயலாளர் புஸ்பகுமார அவர்களிடம் இன்று (14) பேச்சு கலந்தாலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் செயலாளர் மதியழகன்,பொருளாளர் கே.சிவராஜா ஆகியோர்கள் உட்பட வர்த்தகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


