நாட்டில்; ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலினை தொடர்ந்து பொது மக்கள் தங்களது தொழில் வாய்ப்புக்களை இழந்து பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து நிவாரணங்களையும் வழங்கி வருகிறது.இதற்கு வலு சேர்க்கும் வகையில் அரசாங்கத்திற்கு அரசார்பற்ற அமைப்புக்கள் நிறுவனங்கள்,மற்றும்; தனி துறையினர் ஆகியோர் உதவி வருகின்றனர்.
இந்த செயத்திட்டத்திற்கு மேலும் உதவும் வகையில் ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பரிபாலன சபை உறுப்பினர்கள். ஹட்டன் பகுதியில் வாழும் தற்போது வருமானமின்றி மிகவும் வறிய நிலையில் வாடும் 600 குடும்பங்களை தெரிவு செய்து அவர்களுக்கு அத்தியவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி ஒன்றினை இலவசமாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிவாரண பொதியில் அரசி கோதுமை மா,சீனி.,பருப்பு உட்பட பல பொருட்கள் அடங்குகின்றன.
இந்த நிவாரண பொருட்கள் வீடு விடாக சென்று தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இது குறித்த கோயில் பரிபாலன சபையின் பொருளாளர் சுந்தரேசன் கருத்து தெரிவிக்கையில்.
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரானா வைரஸ் காரணமாக ஹட்டனில் வாழும் ஏழைக்குடும்பங்களில் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் இன்னல்களை ஓரளவு தீர்க்கும் வகையில் ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர் உதவு முனவந்துள்ளது.
இதற்கமைய கிராம சேவகரின் வழிகாட்டல்களுக்கமைய வீடு வீடாக சென்று இந்த ஏழைக்குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.