பொகவந்தலா பகுதியில் 44 தோட்டங்களில் வாழும் 6046 குடும்பங்களுக்கு கொரோனா விழிப்புணர்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
பொகவந்தலா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலா பிரதேசத்தை சுற்றிவுள்ள சுமார் 44 தோட்டங்களில் வாழும் 6046 குடும்பங்களைச் சேர்ந்த 23862 பேருக்கு கொரோனா நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்றினை பொகவந்தலா பொலிஸ் நிலையம்,பிரிடோ அரச சார்பற்ற நிறுவனம் மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்து நேற்று (07) திகதி முன்னெடுத்துள்ளனர்.
'வீட்டுக்கு வீடு விழிப்புணர்வு' எனும் தொனிப்பொருளில் குறித்த வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பிரிடோ நிறுவனத்தில் பணிபுரியும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள்,தொண்டர் படையணி,தோட்ட இளைஞர்கள் ஆகியோரினதும் பங்களிப்பு இதன் போது பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் போது தோட்டங்களில் காணப்படும் தனி வீடுகள், மற்றும் தொடர் குடியிருப்புக்களுக்கு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி கொரோணா தடுப்பது தொடர்பாகவும்,நோய் அறிகுறிகள் காணப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் வெளியிடங்களில் இருந்து வருகை தந்தவர்கள் இருந்தால் அறிவிப்பது தொடர்பாகவும் ஒலி பெருக்கிகள் மூலம் விளக்கப்பட்டதுடன் துண்டு பிரசுரங்களும் இதன் போது விநியோகிக்கப்பட்டன.
நேற்று ஆரம்பித்த இந்த வேலைத்திட்டம் தொடர்;ந்து மூன்று நாட்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.
நேற்றைய தினம் பொகவந்hலா, கெம்பியன், லொயினோன் ,சென் விஜயன், பிரிலண்ட், எல்டி, நோத்கோவா, எல்டொப், லின்ஸ்டன், பெட்ரசோ உள்ளிட்ட பல தோட்டங்களில் இந்த தெளிவு படுத்தும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டன.
குறித்து விழி;ப்புணர்வு செயத்திட்டத்தினை முன்னெடுக்கும் போது பல தோட்டங்களில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அரசாங்கம் வழங்கியிருந்த அறிவுறுத்தல்களை பின் பற்றி வீடுகளிலேயே தங்கியிருந்தனையும் முகக்கவசம் அணிந்திருந்ததனையும் காணக்கூடியதாக இருந்தன.
தோட்டங்களில் உள்ள விளையாட்டு மைதானங்கள் விரச்pசோடிக்கிடந்ததனையும் காணக்கூடியதாக இருந்தன.
குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்திற்கு அரச சார்பற்ற நிறுவனமான பரிடோ நிறுவனம் இதற்கு அனுசரணையினை வழங்கியிருந்தன.
இந்நிகழ்வுக்கு பிரிடோ நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்டப்பணிப்பாளர் எஸ்.கே.சந்திரசேகரன், பொகவந்தலா பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள், ஊடகவியலாளர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், தொண்டர் படையணி உறுப்பினர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இது குறித்து பிரிடோ நிறுவனத்தின் எஸ்.கே. சந்திரசேகரன் கருத்து தெரிவிக்கையில் மலையக தோட்டப்புறங்களில் தேசிய சுகாதார திட்டங்கள் முன்னெடுப்பது என்பது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அதற்கு காரணம் பெரும் தொகையான மக்களுக்கு சேவையினை பெற்றுக்கொடுப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் பரந்து நிலப்பரப்பு காரணமாக சுகாதார வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பது சிரமாக உள்ளன.
இந் நிலையில் எமது மக்கள் சிறிய அறைக்குள்ள சமூகமாக வாழ்வதும். தொலைக்காட்சி பார்ப்பதென்றாலும் சரி குளிப்பதற்கு செல்வதென்றாலும் சரி சமூகமாக வாழ்கின்றனர்.அத்தோடு தோட்டப்புறங்களில் வாழுகின்ற இளைஞர்களும் மைதானத்தில் சமூக இடைவெளியினை பேணாது விளையாடுவதுமே பழக்கமாக கொண்டுள்ளனர். இந் நிலையில் இந்த தொற்று ஏற்பட்டால் தோட்டங்களில் பாராதூரமாக வைரஸ் பரவக்கூடிய நிலை காணப்படுகின்றது.இதன் பாரதூரத்தினை எமது மக்கள் அறியாததன் காரணமாக அலட்சியமாக இருந்து விடுகின்றனர்.எனவே தான் நாங்கள் இந்த வைரஸ் பரவினால் ஏற்படக்கூடிய பாரதூரத்தினை விளக்கி இந்த செயத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.இதற்கு அரச துறையினை சார்ந்த சுகாதார அதிகாரிகளிதும்,பாதுகாப்பு பிரிவினரதும் ஆதரவினை பெற்று இந்த செயத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.
இந்த கொரானா ஒழிப்புக்காக பாதுகாப்பு துறையினர,; மற்றும் வைத்தியர் துறையினர்,சுகாதார பிரிவினர் தங்களுடைய சேவையினை இரவு பகல் பாராமல் வழங்கி வருகின்றனர.; அவர்களுக்கு நாம் எமது ஒத்துழைப்பினை பெற்றுக்கொடுப்பதுடன் அவர்களுக்காக இறை பிரார்த்தனையும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -