பாறுக் ஷிஹான்-
சம்மாந்துறை பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான 5000 கொடுப்பனவுகள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் புதன்கிழமை(8) மட்டக்களப்பு தரவையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன் போது இப்பகுதியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களின் தேவைகளை உடனறிந்து குறித்த கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது உதவி பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசீக் சம்மாந்துறை சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் யு.எல்.எம் சலீம் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எம் அன்சார் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் சம்மாந்துறை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கப்டன் நவரத்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பகுதியில் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் மொத்தமாக 9572 எண்ணிக்கை காணப்படுவதுடன் இதில் சமூர்த்தி பெற காத்திருப்போர் பட்டியலில் 2952 குடும்பங்கள் உள்ளன.இப்பகுதயில் மொத்தமாக 12524 குடும்பங்கள் காணப்பட்ட போதிலும் சமூர்த்தி திட்டத்தின் கீழ் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள சகன பியவர சகன அறனெளு கடன் மூலம் 10390 குடும்பங்களுக்கு இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் கருத்து தெரிவிக்கையில்
குறைந்த வருமானம் பெறக்கூடியவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவுகளை அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 பிரதேச செயலகங்களிலும் ஒரே தடவையில் நிறைவேற்றிக்கொண்டு இருக்கின்றோம் .அம்பாறை மாவட்டத்தில் ஏறத்தாழ 38500 பேருக்கு முன்னுரிமை பட்டியலில் அவர்களின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு குடும்பங்களுக்கான 175 மில்லியன் ரூபாய்களை இன்றைய தினம் நாங்கள் சமுர்த்தி வங்கிகள் ஊடாக குடும்பங்களின் வீட்டுக்கு வீடாக சென்று சமுர்த்தி உத்தியோகர்த்தர்களின் மேற்பார்வையின் கீழ் நாங்கள் கொடுப்பனவுகளை மேற்கொள்கிறோம்.
இதற்கு மேலதிகமாக கடந்த தினங்களின் அம்பாறை மாவட்டத்தில் ஏறத்தாழ 90000 குடும்பங்களுக்கான சமூர்த்தி சகன பியவர மற்றும் அறுனுலு இலகுக்கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம்.அதன் அடிப்படையில் ஏறத்தாழ 560 மில்லியன் ரூபாய்களை நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் சகன பியவர கடனாக வழங்கியுள்ளோம்.
அதன் முதட்கட்டமாக 5000 ரூபாவினை நாங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கு வழங்கினோம் இரண்டாவது கட்ட 5000 ரூபாவை எதிர்வரும் காலங்களில் மேலதிக ஆலோசனைகளுடன் வழங்க எண்ணியுள்ளோம்.ஆகவே அம்பாறை மாவட்டத்தில் ஏறத்தாழ இந்த சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக ஏறத்தாழ 150000 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியினை தற்பொழுது இந்த கொரோனா பாதிப்பின் காரணமாக சமுர்த்தி திணைக்களத்தினால் முன்னெடுத்து கொண்டிருக்கின்றோம் என குறிப்பிட்டார்.

