“நாம் அனைவரும் ஒன்றிணைவோம், கொரோனாவை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டிகள், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டு வருகின்றன.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, இலங்கை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள குறித்த சுவரொட்டியில் கொரொனா வைரஸ் பரவல் தொடர்பாகவும், கொரொனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்புப் பெற வேண்டிய விதிமுறைகள் பற்றியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் குறித்த சுவரொட்டிகள் இதுவரை 3,500 ஒட்டப்பட்டுள்ளனவென, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த அறிவுறுத்தல்களை அனைவரும் கடைப்பிடித்து நடந்துகொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டிக்கொண்டுள்ளனர்.