சம்மாந்துறை ஸ்ரீ பத்ரகாளிஅம்பாள் ஆலயத்தின் 2லட்சருபா பெறுமதியான உலருணவுப்பொதிகள்

காரைதீவு நிருபர் சகா-

ரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் கொரோனப்பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பின்தங்கிய கோரக்கர் கிராமத்திற்கு உலருணவுப்பொதிகளை நேற்று வழங்கிவைத்தது.

பொருளாதாரவளம் குன்றிய ஆலயமாகவிருந்தபோதிலும் சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயநிருவாகசபையினர் 2 லட்சருபா நிதியை ஒதுக்கி அதற்கு 200 உலருணவுப்பொதிகளை பொதிசெய்து கோரக்கர் கிராமத்திலுள்ள தமிழர் முஸ்லிம்கள் வாழும் சகல வீடுகளுக்கும் காலடியில் சென்று வழங்கிவைத்தனர்.

ஆலய பரிபாலனசபைத்தலைவர் சீ.சுப்பிரமணியம் செயலாளர் யோ.கிருண்ணமூர்த்தி பொருளாளர் எஸ்.கனகராசா அதிபர் ந.சுந்தரநாதன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களான காரைதீவின் சமுகசெயற்பாட்டாளர்கள் கே.ஜெயசிறில் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பிரமுகர்கள் அதனை வழங்கிவைத்தனர்.

கோரக்கர் கிராம இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் கோரக்கர்கிராமத்தின் முதல் பட்டதாரி சோ.தினேஸ்குமார் ஆலயதலைவர் மோகன் இளைஞர்கள் இச்சேவைக்குப் பக்கபலமாக பரி பூரணமான ஒத்துழைப்பை நல்கினார்கள்.

இந்து ஆதீனங்கள் இந்துமதகுருமார் அமைப்புகள் விடுத்த வேண்டுகோள் நிமித்தம் நெருக்கடிமிக்க இன்றைய காலகட்டத்தில் இவ் ஆலயநிருவாகிகள் முன்வந்து இவ் மனிதாபிமானப் பணியினை ஊரடங்குவேளையையும் பாராது மேற்கொண்டதையிட்டு பலரும் பாராட்டினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -