மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம் .அசங்க அபேவர்தன
எப்.முபாரக்-அரச நெல் கொள்வனவு திட்டத்தின் கீழ் 2019/2020 பெரும் போகத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 2587மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் இதற்காக 135 மில்லியன் ரூபா வரையில் செலவிடப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம் .அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
இந்நெல் மாவட்டத்தில் உள்ள 14 அரிசி ஆலைகளிலும்,நெல் சந்தைப்படுத்தும் சபைக்குரிய 7களஞ்சியசாலைகளிலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. இந் நெல்லை குற்றி பாவணைக்கு வழங்குவதற்கான அனுமதி அரசாங்கத்தினால் கிடைக்கப்பெற்றதும் அது தொடர்பான மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அத்துடன் 2020 சிறுபோகத்தில் மாவட்டத்தில் மொத்தமாக 21500ஹெக்டயர் அளவில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் மொரவெவ பெருநீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் இம்முறை நீர்த்தட்டுப்பாடு காரணமாக 800 ஏக்கரில் மறுபயிர்ச்செய்கை மட்டும் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறுபோக பயிர்ச்செய்கைக்கான மொத்த பசளை தேவை யூரியா 4600மெற்றிக் தொன்,டி(T).எஸ்.பி. 573 மெற்றிக்தொன்,எம்.ஓ.பி 1220 மெற்றிக் தொன் ஆகும்.
தேவையான உரம் விவசாயிகளுக்கு வழங்க கையிருப்பில் காணப்படுவதாகவும் தேவையான விவசாயிகள் உரிய கமநல சேவைகள் நிலையம் மூலம் பசளைகளை பெற முடியும்.
அத்துடன் செளபாக்யா திட்டத்தின் மூலம் இதுவரை 4000 விவசாயிகளுக்கு பயிர் கன்று மற்றும் மரக்கறி விதை பக்கற்றுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் விவசாயிகள் தமது உணவுத்தேவைகளை தாமே பயிர் செய்து பூர்த்தி செய்ய முடியும் என்று அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
