இதுவரையில் கொரோனா வைரசு தொற்று நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 219 ஆகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இன்று தெரிவித்தார்.
நேற்;றைய தின (2020.04.13) த்தில் 8 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டதுடன் இவர்களில் 7 பேர் புனானி தனிமைப்படுத்தல் மத்திய நலையத்தில் தனிமைப்படுத்தல் மருத்துவ சிகிச்சைக்கு உள்வாங்கப்பட்டு;ள்ள பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற நோயாளி ஜா ஹெல சுதுவெல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளார்.
இன்றைய தினம் ஒரு நோயாளி பதிவாகியுள்ளதுடன் இவர் புனானி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார் என்றும் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.
