ஜூன் 2 க்கு முன்னர் புதிய நாடாளுமன்றம் கூடவில்லை என்றால், அது ஒரு அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கும்!


ஜூன் 2 க்கு முன்னர் புதிய பாராளுமன்றம் கூட தவறினால் நாட்டில் அரசியலமைப்பு ரீதியலான பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதி செயலாளர் பி.பீ . ஜயசுந்தரவுக்கு எழுதிய கடிதத்தில் இது கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால், . புதிய பாராளுமன்றக் கூட்டத்திற்கான புதிய திகதியை வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்.

அரசியலமைப்பின் விதிகளின்படி, அந்த திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட திகதிக்கு மூன்று மாதங்களுக்குள் இருக்க வேண்டும். இதன்படி ஜுன் மாதம் 1ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும். அப்படியானால் தேர்தல் மே 27 அல்லது 28 அன்று நடத்தப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடு பணிகள் இந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட வேண்டும்.

தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தவரை, அந்த நாட்களில் தேர்தல்களை நடத்துவதில் உள்ள சிரமத்தை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -