க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 19 பேர் 9 பாடங்களிலும் ஏ. சித்தி

ஹட்டன் கே,சுந்தரலிங்கம்-

டந்து முடிந்த க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டன.பெறுபேறுகள் வெளியானதை தொடர்ந்து ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரியில் இம்முறை வெளியான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 19 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

குறித்த பெறுபேறுகளில் ஆங்கில மொழிமூலம் மூன்று மாணவர்கள் 9 ஏ சித்திகளையும் தமிழ் மொழிமூலம் 16 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.குறித்த பரீட்சைக்கு தோற்றிய 162 மாணவர்களுள் 162 மாணவர்களும் உயர்தரம் கற்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.

குறித்த பாடசாலையில் இம் முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் தமிழ்,சமயம்,வரலாறு, உட்பட ஐந்து பாடங்களில் மாணவர்கள் 100 வீத சித்தியினை பெற்றுள்ளதாகவும்,ஏப்ரேல் மாதம் முதல் அசாதாரண சூழல் நாட்டில் ஏற்பட்ட நிலையில் இந்த அளவுக்கு பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாக அதிபர் ஆர்.ஸ்ரீதர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து 9ஏ சித்திகளை மாணவர்களுள் ஒருவரான அருள்மொழிச்செல்வன் சாருகாசினி மற்றும் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் , ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கையில்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -