திருகோணமலையில் முகக் கவசங்களை அணிந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஆர்வம் காட்டிய மக்கள்.



எப்.முபாரக்- 

ரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து மக்கள் தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. 

குறிப்பாக இன்று(16)திருகோணமலை பொதுச் சந்தையில் மக்கள் முக கவசம் அணிந்து தங்களுடைய பொருட்களை கொள்வனவு செய்ததோடு, வர்த்தக நிலையங்கள் மற்றும் வங்கிகளிலும் பொது மக்கள் சம இடைவெளியை பேணி பொருள் கொள்வனவிலும்,வங்கி செயற்பாடுகளிலும் பொது மக்கள் ஈடுபட்டார்கள்.

இருந்தபோதிலும் சுகாதாரத்தை பேணுமாறு பொலிசாரும் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் இராணுவத்தினரும் மக்களை தெளிவுபடுத்தியதையும் எம்மால் அவதானிக்க முடிந்ததோடு,ஒலி பெருக்கிகளிலும் பொது மக்களை விழிப்பூட்டும் வகையில் கொரொனா வைரசின் தாக்கம் மற்றும் சுத்தத்தை பேணுவது தொடர்பாகவும் மூன்று மொழிகளிலும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இன்றைய தினம் திருகோணமலை பஸ் நிலையத்திலும் மக்கள் பொருட்களை வைத்து வியாபாரம் மேற்கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

திருகோணமலை நகர பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டதோடு திருகோணமலை தலைமையக போக்குவரத்து பொலிஸார் அதனை நெறிப்படுத்தியதையும் காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை திருகோணமலை நகரில் இராணுவம் மற்றும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -