வதந்தியை நம்பி ஊமத்தங்காய் விதையை கரைத்து குடித்த 11 பேர் – மருத்துவமனையில் கவலைக்கிடம் ! இந்தியாவில் சம்பவம்!!


கொரோனா வைரஸ் குறித்து பரப்பப்பட்ட வதந்தியால் இப்போது 11 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000 ஐ தாண்டியுள்ளது. உயிரிழப்பு 124 ஆக உள்ளது. தொற்று இருப்பவர்களைக் காப்பாற்றுவதற்காக மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊமத்தங்காய் விதையைத் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவாது என்று சமூகவலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. அதை உண்மை என நம்பிய ஆந்திராவைச் சேர்ந்த மகேஷ் பாபு என்பவர் தன் குடும்பத்தினர் 11 பேருக்கு ஊமத்தங்காய் விதையை அரைத்து தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்த தண்ணீரை குடித்த அனைவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததை அடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்கள் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இப்போது அவர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -