அரசாங்கத்தின் நடவடிக்கையில் மக்கள் விரக்தியுற்று வருகின்றனர். அதனால் UNPயினர் ஒன்றுபட்டு செயற்பட்டால் மீண்டும் ஆட்சியமைக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது என UNPயின் செயலாளரும், முன்னாள் கல்வியமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளர்.
UNP தலைமையகமான ஶ்ரீ கொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்;-
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் மக்கள் எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அரசாங்கம் மக்கள் செல்வாக்கை இழந்து வருகின்றது. கோத்தாபய அரசாங்கம் சீனா சரணங் கட்சாமி என்ற கொள்கையையே பின்பற்றி சென்றது. ஆனால் இன்று சீனா கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகி இருப்பதால், அரசாங்கத்துக்கு சீனாவிடம் நிதியுதவிகளை பெறுவதற்கு வேறு வழிதெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றது. சீனாவை மாத்திரமே நம்பி அரசாங்கம் செயற்பட்டுவந்தது.
அத்துடன் நாட்டை கொண்டு செல்ல அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது. நிதி வழங்குவதற்கு சீனாவைப் தவிர வேறுநாடுகள் இல்லை. சீனா எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக எமது நாட்டின் சுற்றுலாத்துறையும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.