திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்தினை மீறி செயற்பட்ட ஐவரை நேற்று (27) மாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் இரண்டு பெண்களும், மூன்று ஆண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் நகரில் இரண்டு பெண்களும்,ஆண் ஒருவரும் ஊரடங்கு சட்டத்தினை மீறி சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்ட வேளையில் பொலிஸாரினால் கைது செய்துள்ளதாகவும்,இவர்கள் மூதூர் மற்றும் பதுளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆரம்ப கட்ட விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இருவர் கந்தளாய் பேராறு பகுதியில் வீதியில் நின்ற நிலையில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.