காரைதீவு சம்மாந்துறை நல்லிணக்கக்குழுக்கள் இணைந்துநடாத்தும் சமுக நல்லிணக்கத்திற்கான ஒன்றுகூடல் (29) சனிக்கிழமை காரைதீவில் நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக பிரதேச செயலாளர்களான சிவ.ஜெகராஜன் (காரைதீவு) எஸ்.எல்.எம்.ஹனிபா(சம்மாந்துறை) விசேட அதிதிகளாக தவிசாளர்களான கே.ஜெயசிறில்(காரைதீவு) எ.எம்.எம்.நௌசாட்(சம்மாந்துறை)ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
முன்னதாக காரைதீவு விபுலாநந்த சதுக்கத்தில் நல்லிணக்க வாசகம் பொருந்திய பதாதை அதிதிகளால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.
பிரதான ஒன்றுகூடல் காரைதீவு விபுலாநந்த கலாசார மண்டபத்தில் பிரதேச நல்லிணக்கக்குழுத் தலைவர்களான எஸ்.தங்கவேல் (காரைதீவு) ஏ.சுதர்சன்(சம்மாந்துறை) தலைமையில் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது.
கலைநிகழ்ச்சிகள் அதிதிகளின்உரைகள் என்பன இடம்பெற்றன.செயலாளர் ஜ.எம்.றியாழ்நன்றியுரையாற்றினார்.



