சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும் எனும் நுால் அறிமுக விழா வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் ஜாமிஆ நளிமியா கலாபீட பணிப்பாளா் எம்.ஏ.எம். சுக்ரி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ் பல்லைக்கழக முன்னாள் வேந்தா் பேராசிரியா் கலாநிதி எஸ் பத்மநாதன் கலந்து கொண்டாா். கௌரவ அதிதியாக புருனை பல்கலைக்ககழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியா் கலாநிதி பி.ஏ குசைன்மியா , பேராசிரியா் சோ. சந்திரசேகரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் கக்கீம் , பேராசிரியா் ரமீஸ் அப்துல்லா ஏ.சி.எம் புகாரி மௌலவி, ஏ.சி.எம் இப்றாகீம் ஆகியோறும் சம்மாந்துறை வரலாறு நுால் பற்றி உரையாற்றினாா்கள்.
நுாலின் சிறப்புப் பிரதி ஒன்றை முன்னாள் அமைச்சா் காலம் சென்ற அன்வா் இஸ்மாயிலின் பாரியாருக்கு பேராசிரியா் பத்மநாதன் அவா்கள் வழங்கி வைத்தாா்கள். 15 வருடங்களுக்கு முன் இந் நுாலை எழுத உரிய நுாலாக்க குழு அமைத்து முயற்சித்தவா் மறைந்த அமைச்சா் அன்வா் இஸ்மாயில் என்பது குறிப்பிடத்தக்கது 800 பக்கங்களை கொண்ட இந் நுால் இவ் ஊரின் வரலாறு ஆட்சியாளா்கள், அப்பிரதேச வரலாற்று தடங்கள், குடிப்பரம்பரையினா் அரச தனியாா் தளங்கள் இவ் ஊரின் கல்வியலாளா்கள் என பல்வேறு புகைப்படங்கள் வரலாறுகள் பதிக்கப்பட்டுள்ளன. கொழும்பில் வாழ் சம்மாந்துறை ஊரைச் சோ்ந்த சட்டத்தரணிகள் கல்வியலாளா்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனா்.





