ஊரடங்கு சட்டம் அமுலில் பொலிசாரின் சமிக்கைக்கு நிறுத்தாமல் ஓடிய இருவர் மடக்கிப்பிடிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளை வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி தப்பிச்செல்லமுயன்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் ஊரடங்கு சட்டத்தின் போது கடமையில் இருந்த பொலிஸாரின் சைகையை மீறி இரு இளைஞர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி தப்பிசெல்ல முயன்றுள்ளனர்.

இதனையடுத்து வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் குழுவினர் குறித்த இருவரையும் துரத்திச்சென்று பூங்காவீதியில் வைத்து மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட இருவர் மீதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்திய பின்னர் சென்றமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின் சைகையை மீறி பயணித்தமை, வாகனத்தை வேகமாக செலுத்தியமை போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -