முஸ்லிம் அரசியல் தலைமைகள் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும்- அஸாத் சாலி வேண்டுகோள்


மினுவாங்கொடை நிருபர்-
முஸ்லிம் அரசியல்வாதிகள் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து ஓரணியாகப் போட்டியிட்டு 'பேரம்' பேசும் சக்தியாக உருவாக வேண்டும் என, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அஸாத்சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த வேண்டுகோளில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
முஸ்லிம் அரசியல் தலைமைகள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து ஓரணியாகப் போட்டியிட வேண்டும். அதன்மூலம், நாட்டின் 'பேரம்' பேசும் சக்தியாக மாற வேண்டும்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் வேட்பு மனுத் தாக்கலுக்குத் தயாராகி வருகிறது. இச்சந்தர்ப்பத்தில், சகல முஸ்லிம் கட்சிகளும் வாக்குகளைப் பிரிப்பதை விடுத்து ஒன்றிணைந்து செயற்படுவது, காலத்தின் கட்டாயத்தேவையும் அவசியமுமாகும். இது தொடர்பில், தேசிய ஐக்கிய முன்னணி இதற்கான முன்மொழிவை அனைத்துக் கட்சிகளிடமும் தெரிவித்துள்ள போதிலும், சாதகமான பதில் எதுவும் இதுவரையிலும் கிடைக்கவில்லை.
பொதுஜன பெரமுனவுக்கு மூன்றிலிரண்டு தனிப்பெரும்பான்மையை எடுப்பதற்கு எவ்வகையிலும் சாத்தியமில்லை. எனவே, இத்தருணத்திலாவது முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்தால் மாத்திரமே பலமான ஒரு பேரம் பேசும் சக்தியாக உருவெடுக்க முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -