தேசிய காங்கிரசின் தலைமைக் காரியாலயத்தில் வேட்பாளராய் கையொப்பமிட்டார் சலீம் டீ.எஸ்.



ட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் திகாமடுள்ள தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுமுகமாக, தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்புமனுவில் இன்று (19) அக்கரைப்பற்றில் அமைந்துள்ள கிழக்கு வாசலில் வைத்து ஒப்பமிட்டார்.

இதன்போது, தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் மற்றும் தேசிய காங்கிரஸில் போட்டியிடும் இதர வேட்பாளர்கள் அத்துடன் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்,சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, பள்ளிவாசல் நிருவாகிகள், உலமாக்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்க பிரதிநிதிகள், மாநகர சபை உறுப்பினர்கள், புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -