மொட்டு கட்சியின் அம்பாறை வேட்பாளர் ஏன் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை?

பொதுநல செயற்பாட்டாளர்கள் கேள்வி-
ப்பானுக்கு சென்று கடந்த வாரங்களில் நாடு திரும்பிய மொட்டு கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் ஒருவர் கொரோனா தனிமைப்படுத்தல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானுக்கு சென்றிருந்த இவர் அங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளூடாக பயணித்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் என்றும் அங்கிருந்து அவருடைய பூர்வீக கிராமத்துக்கு நேரடியாக சென்று வேட்பு மனு தாக்கலுக்காக அம்பாறை மாவட்டத்தை வந்தடைந்தார் என்றும் தெரிய வருகின்றது.

இவர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் கிராமங்களுக்கு ஊரடங்கு நேரத்திலும் நேரில் சென்று நேற்று திங்கட்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார் என்றும் சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் இவர் ஏன் கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை? இவர் ஏன் கொரோனா காவியாக இருக்க முடியாது? என்று அரசியல் சமூக பொதுநல செயற்பாட்டாளர்கள் வினவுகின்றனர்.

இவரையும், இவரை போன்றவர்களையும் உடனடியாக தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தரப்பினர் கோரப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -