அம்பாறையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு மேலும் நீடிப்பு



பாறுக் ஷிஹான்-

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு அம்பாறை மாவட்டத்திலும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,கம்பஹாஇள்ள ஊரடங்கு சட்டம் நாளை (24) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் திங்கட்கிழமை(23) காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கிழக்கு மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.அத்துடன் பிற்பகல் 2.00 மணிக்கு குறித்த பிரதேசங்களுக்கு மீண்டும் ஊடரங்கு அமுல்படுத்த பொலிஸார் இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் குறித்த கிழக்கு பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்க்கிழமை(24) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுலாகும்.

அத்துடன் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது சில தனியார் போக்குவரத்து சேவைகள் நடைபெற்ற நிலையில் இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -