தேர்த‌லை ஒத்திவைத்த‌மைக்காக‌ அர‌சுக்கும் தேர்த‌ல் ஆணைக்குழுவுக்கும் உல‌மா க‌ட்சி ந‌ன்றி தெரிவித்துள்ள‌து.


நாட்டின் கொரோனா நிலையை க‌வ‌ன‌த்திற்கொண்டு தேர்த‌லை ஒத்திவைத்த‌மைக்காக‌ அர‌சுக்கும் தேர்த‌ல் ஆணைக்குழுவுக்கும் உல‌மா க‌ட்சி ந‌ன்றி தெரிவித்துள்ள‌து.
தேர்த‌ல் ஆணைக்குழுவுக்கு உல‌மா க‌ட்சியால் அனுப்பிவைக்க‌ப‌ட்டுள்ள‌ க‌டித‌த்திலேயே இவ்வாறு குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து.

ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு, புத்த‌ள‌ம், திகாம‌டுள்ள‌ மாவ‌ட்ட‌ங்க‌ளில் விமான‌ம் சின்ன‌த்தில் இத்தேர்த‌லில் போட்டியிடும் உல‌மா க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் அவ‌ர்க‌ளால் அனுப்பிவைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ க‌டித‌த்தில் மேலும் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌தாவ‌து,

பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வின் அர‌சாங்க‌ம் என்ப‌து தேர்த‌லைக்க‌ண்டு ப‌ய‌ப்ப‌டுகின்ற‌ அர‌சாங்க‌ம் அல்ல‌ என்ப‌தை நாடு அறியும்.
ப‌ய‌ங்க‌ர‌வாத‌ கால‌த்தில் கூட‌ கிழ‌க்கு மாகாண‌ ச‌பைக்கான‌ தேர்த‌லை ம‌ஹிந்த‌ அர‌சு ந‌ட‌த்திக்காட்டியிருந்த‌து.

இந்த‌ பொது தேர்த‌லுக்கான‌ வேட்பும‌னு ப‌த்திர‌ங்க‌ள் கோர‌ப்ப‌ட்ட‌ பின் ச‌ர்வ‌தேச‌த்திலும் ந‌ம‌து நாட்டிலும் கொரோனா வைர‌ஸ் பெரும் வைர‌ல் ஆகிய‌தை தொட‌ர்ந்து ப‌ல‌ க‌ட்சிக‌ளும் தேர்த‌லை பிற்ப‌டுத்துமாறு அர‌சை கோரின‌. ஆனாலும் வேட்பும‌னு நிறௌவேறுமுன் அது ப‌ற்றி அர‌சு அறிவித்தால் அர‌சு தேர்த‌லைக்க‌ண்டு ப‌ய‌ந்து விட்ட‌து என‌ எதிர்க்க‌ட்சிக‌ள் சொல்லியிருக்கும்.
ஆனாலும் தேர்த‌லுக்கான‌ வேட்பும‌னு ஒப்ப‌டைக்கும் திக‌தியின் பின் இது ப‌ற்றி முடிவெடுக்கும் உரிமையை அர‌சாங்க‌ம் தேர்த‌ல் ஆணைக்குழுவுக்கு வ‌ழ‌ங்கியிருந்தது. அத‌ற்கிண‌ங்க‌ தேர்த‌ல் ஆணைக்குழுவும் தேர்த‌லை ஒத்திப்போடும் முடிவை எடுத்த‌மை ம‌க்க‌ள் ம‌ற்றும் நாடு மீதான‌ அக்க‌றையை காட்டுகிற‌து.
அத்துட‌ன் ஏப்ர‌ல் மாத‌ம் 25ந்திக‌தி ர‌ம‌ழான் நோன்பும் ஆர‌ம்ப‌மாவ‌தால் அத‌னையும் க‌ருத்திற்கொண்டு தேர்த‌ல் திக‌தியை பிற்ப‌டுத்துமாறு உல‌மா க‌ட்சி தேர்த‌ல் ஆணைக்குழுவை கேட்டுக்கொள்கிற‌து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -