கம்பஹாவில் வேட்பு மனு தாக்கல்


மினுவாங்கொடை நிருபர்-
ம்பஹா மாவட்டத்திற்கான பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட 17 கட்சிகள் (19) வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன. இவற்றுள் 15 கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு, 2 கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
லிபரல் கட்சி மற்றும் ஒக்கொம ரஜவரு ஒக்கொம வெசியோ ஆகிய இரு கட்சிகளினதுமே வேட்பு மனுக்கள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டன. 21 சுயாதீனக் குழுக்கள் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தபோதிலும், அவற்றுல் 15 சுயாதீனக் குழுக்களின் வேட்பு மனுக்களே ஏற்றுக்கொள்ளப்பட்டன.
எதிர்வரும் 2020 பாராளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலிருந்து 15 அரசியல் கட்சிகளும், 18 சுயாதீனக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவை, தமது வேட்பு மனுக்களை, உரிய நேரத்தில் தாக்கல் செய்ததாக, கம்பஹா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சுனில் ஜயலத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -