மின்சார நீர் தொலைபேசிக்கட்டணங்களை மானியமாக வழங்கவேண்டும்.



விசேடகொரோனா அமர்வில் காரைதீவு பி.சபை தவிசாளர் வேண்டுகோள்.
காரைதீவு நிருபர்சகா-

நாட்டில் நிலவும் கொரோh அவசரகாலநிலை கருதி மின்சாரம் தண்ணீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை இம்மாதம் மானியத்தில் வழங்குமாறு வேண்டுகிறோம். இல்லாவிடில் அரைக்கட்டணம் செலுத்த வசதி செய்யவேண்டும்.

இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் மாதாந்த விசேட கொரோனா அமர்வில் உரையாற்றிய தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள்விடுத்தார்.

உறுப்பினர்கள் முகமூடி சகிதம் அமர்வில் கலந்துகொண்டமை விசேடஅம்சமாகவிருந்தது.அவர்களின் இருக்கையும் முன்பின்னாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இவ்விசேட கொரோனா அமர்வு நேற்று(23) திங்களன்று சபையில் நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;:
குழந்தைகள் மாணவர் தொடக்கம் வயோதிபர் வரை வீட்டிலிருக்கும் தருணம் ஸ்மாhட்போன் பாவிக்கிறார்கள். அதற்கான டேட்டா வசதியை இந்தவாரத்திற்காவது இலவசமாக வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்வரவேண்டும்.
அரசினால் விலைகுறைப்புச்செய்யப்பட்ட உணவுப்பொருட்களை மக்கள் பெறும்வண்ணம் ஏற்பாடுசெய்யப்படவேண்டும். இன்னும் மீன்ரின் பருப்பு என்பனமக்களுக்கு புதிய விலையில் கிடைக்கவில்லை.
நாளாந்தவேலை சமுர்த்தி பயானளிகளுக்கு விசேடமாக உலருணவுப்பொதிகள் வழங்க அரசு துரிதமாக செயற்படவேண்டும். ஊரடங்கு காரணமாக வீட்டில் முடக்கப்பட்டால் அவர்களின் ஜீவனோபாயம் கேள்விக்குறியாகவுள்ளதை அறிவோம்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தாமாகமுன்வந்து சுகாதாரஆலோசனை பெறவேண்டும். அதைவிடுத்து பொதுமக்களால் எமது தகவல் மையத்திற்கு அறிவிக்கப்படும்பட்சத்தில் நாம் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளோவோம்.

24மணிநேரமு;இயங்கும் தகவல்மையத்தை எமது நூலகத்தில் திறந்துள்ளோம்.மேலும் விசேட செயலணிக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் பீதியடையத்தேவையில்லை. என்றார்.
அமர்வில்பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களும் கொரோனா தடுப்பிற்காக ஜனாதிபதி பிரதமர் இராணுவம் முப்படையினர் சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுவருகின்ற வேலைத்திட்டத்திற்காக நன்றி தெரிவித்ததுடன் தவிசாளர் கொணர்ந்தவேலைத்திட்டத்தைப்பாராட்டினர்.

சபையின் ஒரேயொரு பெண் உறுப்பினர் திருமதி சின்னையா ஜெயராணி எதிர்வரும் பாராளுமன்றதேர்தலில் தான்சாhர்ந்த இலங்கைத்தமிழரரசுக்கட்சியில் போட்டியிடுவதை சபையில் அறிவித்துஅதற்கான விடுமுறையை அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -