கொரோனாவின் ஊற்றுக்கண் சீனாவின் உகான் என உலகமே கூறி வரும் நிலையில், அது அமெரிக்காவில் தோன்றியது என்றும் அமெரிக்க ராணுவம் அதை உகானுக்கு பரவச் செய்தது என்றும் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜியான் (Zhao Lijian,) கடந்த வாரம் டுவிட்டரில் பதிவு செய்தார்.
இதை அடுத்து வாஷிங்டனில் உள்ள சீன தூதரை அழைத்தும் அமெரிக்கா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவை " சீன வைரஸ் " என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ (Bill de Blasio) இது அமெரிக்கர்களுக்கும் அங்குள்ள ஆசியர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சி என கூறியுள்ளார்.
இதற்கு சீனாவும் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்வதாக கூறியுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறுகையில்,
அமெரிக்கா முதலில் தனது சொந்த விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -