ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளராக காதர் மஸ்தான்!


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இன்று (11) கொழும்பில் பிரதமரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி உத்தம கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் தலைமையில் பிரதமர் கெளரவ மஹிந்த ராஜபக்ச அவர்களின் முன்னிலையில் காதர் மஸ்தான் அவர்கள் உரிய பத்திரத்தில் ஒப்பமிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளராக பிரகடனம் செய்யப்பட்டார்.

இந் நிகழ்வில் நாடு முழுவதற்குமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற தேர்தல் 2020 ற்கான தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -