கல்முனை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முகமாக கல்முனை பொது பஸ் தரிப்பிட நிலையத்தில் பொது மக்கள் மற்றும் பஸ் ஊழியர்களின் நலன் கருதி கைகளை சுத்தமாக வைத்திருக்கும் வகையில் நீர் குழாய் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வானது இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை பஸ் தரிப்பிட நிலையத்தின் சாலை முகாமையாளர் வீ. ஜெளபர் முன்னிலையில் இன்று (18)திறந்து வைக்கப்பட்டது. இதன் போது கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி கே .எஸ்.சுஜித் பிரியந்த கல்முனை பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவு பொறுப்பாதிகாரி பி.என்.சிறிவர்தன மற்றும் பொதுமக்கள் பஸ் நிலைய ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
