வேட்புமனு தாக்கல் செய்துவரும்வழியில் ஆதரவாளர்கள் இடைமறித்துவரவேற்பு
காரைதீவு நிருபர் சகா-தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் கல்முனையைச்சேர்ந்த பொறியியலாளர் செல்வராசா கணேசிற்கு புதன்கிழமை காரைதீவில் பெருவரவேற்பளிக்கப்பட்டது.
த.தே.கூட்டமைப்பின் வேட்புமனுவை அம்பாறைக் கச்சேரியில் தாக்கல்செய்துவிட்டு வரும் வழியில் அவரதுஆதரவாளர்கள் காரைதீவில் இடைமறித்து இந்த வரவேற்பை வழங்கினர்.
காரைதீவு ஸ்ரீ கண்ணகைஅம்மன் ஆலய முன்றலில் அவருக்கு மாலைசூட்டி வரவேற்பளித்த ஆதரவாளர்கள் ஆலயத்தினுள் அழைத்துச்சென்றனர்.
அங்கு மதிய பூஜை நடைபெற்றது. அதில் பங்கேற்ற வேட்பாளர் எந்திரி கணேஸ் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடி விடைபெற்றார்.
அவருடன் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் இளைஞர்; அணித்துணைச்செயலாளர் அருள்.நிதாஞ்சன் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.


