கொரொனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு வேண்டி பிரார்த்தனை



எஸ்.எம்.எம்.முர்ஷித்-

19 கொரொனா வைரஸ் தாக்கத்திலிருந்து உலக மக்களுக்கு பாதுகாப்பு வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் நிகழ்வொன்று மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நடைபெற்றது.

ஏறாவூர் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.எம்.அஹமட் தலைமையில் வாளியப்பா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மௌலவி எஸ்.எல்.பரீட் பிரார்த்தனையினை நடாத்தினார்.

இரவுநேர தொழுகை இறை வழிபாட்டினையடுத்து பிரசங்கம் நடாத்தப்பட்டது. அதன் பின்னர் விசேட பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்வில் பொரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கொரொனா வைரஸ் தாக்கத்திற்கு உரிய பரிகாரம், மருத்துவம் கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் இன்று உலகிலுள்ள அனைத்து நாட்டு மக்களும் உயிர் அச்சத்துடன் இருக்கின்றனர்.

இதனால் இறை பிரார்த்தனைகளை அதிகரித்துக் கொள்ளும்படி ஏற்பாட்டு அமைப்பின் பிரதிநிதி ஏ.எல்.எம்.சிப்லி பொது மக்களைக் கேட்டுள்ளார்.
கொரொனா வைரஸ்; உலகில் இதுவரை 121 நாடுகளில் பரவியுள்ளதாகவும் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் ஐயாயிரம் பேர் வரை மரணித்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை எமது நாட்டில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பத்து பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -