சாதாரண மக்கள் முகக் கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு.


எச்.எம்.எம்.பர்ஸான்-
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் ஓட்டமாவடி, மீராவோடை, பதுரியா நகர், மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் இவ் விழிப்புணர்வு திட்டம் இன்று (17) மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டதோடு, நோய் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் தவிர சாதாரண மக்கள் முகக் கவசம் அணியத் தேவையில்லை எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

அத்தோடு வீண் வதந்திகளை நம்பாமல், அவசியத் தேவையின்றி வெளியில் செல்லாமல் இருந்து கொள்ளும் படியும் பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் கொரோனா அச்சம் காரணமாக பலர் முகக் கவசத்துடன் நடமாடுவதை காணமுடிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -