நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய முன்னணி தாமரை மொட்டு சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்ப்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் பூரணப்படுத்ததப்படுத்தப்பட்டுள்ள நிலையில் (17) பிற்பகல் மூன்று மணிக்கு தாக்கல் செய்யவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் தலைமையில் இந்த வேட்ப்பு மனு தாக்கல் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட சீ.பி.ரத்நாயக்கா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வேட்ப்பு மனுவை மாவட்ட செயலாளரும் , நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஆர்.பி.எம். புஸ்பகுமாரவிடம் கையளிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஸ்ரீPலங்கா பொது ஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட தேர்தல் நடவடிக்கைகள் தலைவராக ஆறுமுகம் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.

