நோர்ட்டன் பிரிட்ஜ் . எம்.கிருஸ்ணா-
அகில இலங்கை பாடசாலை மட்ட குத்துச்சண்டை போட்டியில் கனிஷ்ட பிரிவில், 50-52 எடைப்பிரிவில் ம. மா/நு/சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் தரம் 11இல் கல்வி பயிலும் சி. சபிலாஷினி என்ற மாணவி இரண்டாம் இடத்தை பெற்று பாடசாலைக்கும் மலையகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் டயகம மேற்கு ,2ம் பிரிவில் வசிக்கிறார். இவரின் பயிற்றுவிப்பாளராக அதே பாடசாலையில் ஆசிரியராக கடமை புரியும் செ. செபஸ்டிபத்திக்ராஜ் (செபஸ்டியன்) இருக்கிறார்.
இப்போட்டியானது கடந்த 15ஆம் திகதியில் இருந்து 19ஆம் திகதி பெப்ரவரி வரை மாத்தறை நாரந்தெனிய தேசியப்பாடசாலையில் நடைபெற்றது. இப்போட்டிக்காக இப்பாடசாலையில் இருந்து 3ஆண் மாணவர்களும் ஒரு மாணவியுமாக நால்வர் இப்போட்டிக்கு அழைத்ததுச் செல்லப்பட்டனர்.
எனினும் போட்டியில் மாணவியொருவரே இரண்டாம் இடத்தை பெற்றதற்காக இவருக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது. இம்மாஙவி தோட்டத் தொழிலாளியின் பிள்ளையாவார்.


