அரச பல்கலைக்கழகங்களில் ஈ-கற்கை (e-learning) முறைமையின் கீழ் பதிவுசெய்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காக இணைய வசதிகளை இலவசமாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
குறித்த மாணவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சித்திட்டத்தினை நாளை முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக தெரிவித்தார்.
தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரை மட்டுமே இந்த இலவச இணையச் சேவை அமுலில் இருக்கும்.
மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.03.22
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -