கொரொனோவால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு நோயாளர்களை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்க சம்மதம் தெரிவித்து நோயாளர்களுக்கு பிரத்தியோகமாக படுக்கை அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளனவாம்.
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கோரோனோ என்றால் அம்பாறை -திருமலைக்கு பரவ எவ்வளவு நாட்கள் எடுக்கப் போகின்றது ??.
கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு உங்கள் எதிர்பை காட்டுங்கள் உங்கள் சந்ததிகளை அழித்து இன அழிப்பு செய்யும் திட்டமாக இது அமையப்போகின்றது.
ஏன் மட்டக்களப்பு வைத்தியசாலை மட்டும் திட்டமிட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கில் இன அழிப்புக்கு இலக்கா ??
இதில் நிறைய சூட்சுமம் தங்கியுள்ளது.. கோரோனோ நோய் அடங்கும் வரை இனிமேல் மட்டக்களப்பு வைத்திய சாலைக்கு மக்கள் செல்ல முடியுமா ? அதனால் மட்டக்களப்பு பகுதி தனியார் வைத்திய சாலைகளில் சிறிய காய்ச்சல் நோய்க்கும் அதிக பணம் கொடுத்து சிகிச்சை பெற வேண்டிய அவல நிலை. அப்பாவி நோயாளர்கள் வைத்திய சாலை செல்வதை அச்சமூட்டி தடுக்கவும் இத்திட்டம் அமையலாம்.
கிழக்கு முஸ்லிம்களும் பலமாக எதிர்க்க வேண்டும்.
கொரொனோ நோயாளர்களை நோயாளர்களை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கும் நோய் கிழக்கில் விஸ்வரூபம் எடுக்கலாம்.இது மட்டக்களப்புக்கு மட்டும்தான் என்றும்.அது தமிழர்கள் வாழும் பகுதி என்றும் முஸ்லிம்கள் ஒதுங்கி விட முடியாது.
அம்பாறை மாவட்ட நோயாளர்கள் பெருமளவு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்படுவது வழமை.மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் இருந்து ஏதோ ஒரு வகையில் பரவும். அப்படி பரவும் போது தமிழர்களுக்கு மட்டும் பரவுவதில்லை. ஒட்டுமொத்த கிழக்கு மக்களுக்கும் சேர்த்துத்தான் பரவும். மிகப்பெரிய அழிவுகளை கிழக்கு மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும். முஸ்லிம்களும்தான் அழிய வேண்டும்.அதில் இருந்து முஸ்லிம்கள் தப்ப முடியாது .
ஒட்டுமொத்த மனித சமூதாயத்தையும் ஆட்டிப்படைக்கும் கொரொனோ அழிவில் இருந்து பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வெளிநாட்டு நோயாளர்களை அனுமதிக்கும் அரசின் முடிவை கண்டித்து கிழக்கு வாழ் முஸ்லிம்கள் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை செய்ய வேண்டும் ...
எதிர்வரும் பொது தேர்தலில் கிழக்கில் இருந்து சிறுபான்மை இனங்கள் அரசுக்கோ அல்லது அரசு சார்ந்த கட்சிகளுக்கோ வாக்களிக்கப் போவதில்லை.அப்படிப் பார்த்தால் கிழக்கு வாழ் சிறுபான்மை மக்கள் அரசுக்கு தேவையில்லாத மக்களாகவே கருதப்படுவார்கள் .அப்படித்தான் அரசு கருதலாம்..
கட்சிபேதம் இன பேதம் கோபதாபம் அத்தனையும் மறந்து நாம் எல்லாம் மனிதர்கள் என்ற நோக்கில் இணைந்து கொள்வோம் .அரசுக்கு எதிரான போராட்டத்தை செய்வோம் ..
நாளை வெள்ளிக்கிழமை முழு கிழக்கிலும் முஸ்லிம்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஊர்வலம் செய்ய வேண்டும் .பள்ளி நிருவாகங்கள் முன்னின்று செய்ய வேண்டும்.
இது தமிழர்களுக்கான போராட்டம் என்று முஸ்லிம்கள் ஒதுங்க முடியாது.
