குளுக்கோமா நோயினை கட்டுப்படுத்த வைத்தியர்கள் தாதியர்கள் ஹட்டனில் விழிபுணர்வு ஊர்வலம்.



ஹட்டன் கே.சுந்தரலிங்கம் -
நாட்டிலிருந்து குருட்டுத்தன்;மையினை இல்லாதொழிப்போம் எனும் தொனிப்பொருளில் குளுக்கோமாவினால் ஏற்படும் குருட்டுத்தன்மையினை இல்லதொழிப்பதற்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் தாதியர்,மற்றும் ஊழியர்கள் இணைந்து ஒழுங்கு செய்திருந்த விழிப்புணர்வு ஊர்வலம் இன்று ஹட்டனில் நடைபெற்றன.
இவ் ஊர்வலம் இன்று (06) திகதி காலை 8.30 மணிக்கு ஹட்டன் மல்லியை பூ சந்தியிலிருந்து ஆரம்பமாகி ஹட்டன் பஸ் தரிப்பு நிலையம் வைர சென்றடைந்தது.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் நாட்டிலிருந்து குருட்டுத்தன்;மையினை ஒழிப்போம்,குளுக்மோ உங்கள் கண்களை குருடாக்கும்,குளுக்கோமாவிலிருந்து பாதுகாப்பு பெருவொம். என்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இதன் போது குளுக்கோமா தொடர்பாக விழிப்பூட்ட துண்டி பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் வைத்தியர்கள் தாதியர்கள் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -