கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுபைர் ஹாஜிக்கு கொரோனா இல்லை..!

எம்.எஸ்.எம்.நூர்டீன்-

சிரேஷ்ட ஊடகவியலாளர் காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.நூர்டீன் அவர்களுக்கும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுபைர் ஹாஜி அவர்களுக்கிடைலான  உரையாடலில் பகிரப்பட்டவை..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

அன்புக்குரிய உறவுகளே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்ட நான் அதன் பின்னர் கட்டாரில் இருந்து வருகை தந்த எனது உறவினர்களுடன் சில நாட்கள் தங்கியிருந்தேன் அந்த காலப்பகுதியில் எனக்கு இருமலோ காய்ச்சல் தொண்டை நோய் இருக்

கவில்லை ஆனாலும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது.

இது தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா சம்பந்தப்பட்ட வைத்திய பிரிவுக்கு பொறுப்பாக இருக்கின்ற வைத்திய நிபுணர்கள் ஆலோசித்தேன் தொடர்ச்சியாக எனக்கு இருக்கின்ற மூச்சு திணறல் ஆனது கொரோனா நோயுடைய தாக்கமாக இருக்கலாம் என்று பயந்தேன் அது மாத்திரமல்லாமல் தொடர்ச்சியான மூச்சு கஷ்டம் காரணமாக வைத்திய நிபுணர் குழு ஆலோசனைக் அமைவாக பலநோக்கு வைத்தியசாலையில் எக்ஸ்ரே ஒன்றையும் பெற்றுக் கொண்டேன்.

ஆனால் எக்ஸ்ரேயில் எந்தவிதமான பிரச்சினையில்லை என்று அறிந்து கொண்டேன். ஆனாலும் தொடர்ச்சியான மன அழுத்தம் வீட்டில் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஆதரவாளர்களின் சந்திப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வைத்திய நிபுணரின் ஆலோசனை கனிவாக நேற்று பிற்பகல் ஏறாவூர் வைத்தியசாலை ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

ஆகவே இது தொடர்பில் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டிய காலம் இது நான் குணமடைந்து வீடு திரும்ப அதிகமாக எனக்கு துவா செய்து கொள்ளுங்கள்.

M.S.சுபைர் (BA)
முன்னாள் கிழக்கு மாகாண
சுகாதார அமைச்சர்.


பிந்திக்கிடைத்த தகவல்:

முன்னாள் மாகாண அமைச்சர் ஏறாவூரைச் சேர்ந்த சுபைருக்கு கொரோனா இல்லை

வைத்தியசாலையிலிருந்து இன்று மாலை வீடு திரும்பி குடும்பத்துடன் இணைந்து கொண்டார்

அல்ஹம்துலில்லாஹ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -