சிலாவத்துறை வைத்தியசாலை இயங்குகின்றது. யாழ் மதபோதனைக்குச் சென்று வந்ததாகவும் வெளிநாட்டிலிருந்து வந்ததாகவும் சந்தேகப்படும் சிலர் அவரவர் வீடுகளில் சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளனர்.
வெளியார் குறித்து மக்கள் விழிப்புடன் உள்ளனர். அவ்வப்போது உரிய தரப்பினருக்கு தகவல் வழங்கி வருகின்றனர்.
நேற்றுக் காலை மக்கள் பொருள் கொள்வனவில் ஈடுபட்டபோது நெரிசலாக நின்றமை குறித்து அதிருப்தி வெளியிடப்படுகிறது.
முசலிப் பிரதேசத்தில் இப்போது வரை எந்த அபாயமும் இல்லை. ஆனால் ஏதேனும் நோய்ப் பாதிப்பு ஏற்பட்டால் வைத்திய ரீதியான எந்த அடிப்படை வசதியும் இல்லை.
அதனால் பொதுமக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாகக் கடைப்பிடிப்பதே இப்போது மக்களிடம் எதிர்பார்க்கப்படுகின்ற மகோன்னத பொறுப்பாகும்.
மீள்குடியேறி இன்னும் சரிவர தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டிராத நிலையில் பெருமளவு மக்கள் அன்றாட உணவுக்கு திண்டாடி வருகின்றனர். சில தனிநபர்கள் முடியுமான அளவில் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
முகுசீன் ரயீசுதீன்.
உப தவிசாளர்.
முசலி பிரதேசபை.

