கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவலுடைய வீடியோக்களை யூடியூப்பிலிருந்து நீக்கம் – கூகுள்




 எம்.ஜே.எம் பாரிஸ்-

கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்கும் பணியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க கடும்
அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல்வேறு தினம் தோறும் நடவடிக்கைகளையும் எடுத்தும் வருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட வீடியோக்களை யூடியூப் தளத்திலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கி வருவதாக ஆல்பாபெட்டின் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இதுவரை சுமார் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது. இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாவும், குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதாக கூறும் நிரூபிக்கப்படாத வழிமுறைகள் அடங்கிய வீடியோக்களை கூகுள் நிறுவனம் தொடர்ந்து நீக்கி வருகிறது. 

அத்துடன் கூகுள் மெப்ஸ் சேவையில் கொரோனா தொடர்பான போலி விமர்சனங்கள், உடல்நல மையங்கள் சார்ந்த போலி விவரங்களை நீக்கும் வேலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -