மொட்டு சின்னத்தில் கண்டியில் போட்டியிடும் பாரிஸ் ஹாஜியாரின் வெற்றி உறுதி - நாவலப்பிட்டியில் மஹிந்தானந்த தெரிவிப்பு

எம்.எஸ்.எம். ஸப்வான்-
திர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் திரு. ஏ.எல்.எம். பாரிஸ் அவர்கள் வெற்றிபெறுவது உறுதியான விடயம் என்று கௌரவ மின்சக்தி இராஜாங்க அமைச்சர் திரு. மஹிந்தானந்த அழுத்கமகே அவர்கள் தெரிவித்தார்கள்.

நேற்று (04) கண்டி நாவலப்பிட்டி முஹிதீன் ஜும்மா பள்ளியில் கௌரவ மின்சக்தி இராஜாங்க அமைச்சர் திரு. மஹிந்தானந்த அழுத்கமகே அவர்களின் 30 ஆண்டு கால அரசியல் வாழ்வு பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே
அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரு பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் கண்டியில் போட்டியிடும் திரு. ஏ.எல்.எம். பாரிஸ் அவர்களே உங்களின் எதிர்கால தலைவர். அவரை பாராளுமன்றம் அனுப்புவதில் உங்களின் முழுமையான பங்களிப்பை வழங்குவீர்கள் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற வேட்பாளர் திரு. ஏ.எல்.எம். பாரிஸ் அவர்கள், உடுநுவர பிர்தேச சபை உறுப்பினர், திரு. ஏ.ஜி.எம். ரிஸ்வி அவர்கள் உடுநுவர பிர்தேச சபை உறுப்பினர் திரு. மதீனம் அவர்கள், கௌரவ உலமாக்கள், பள்ளி பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -