புத்தளத்தின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால், கூட்டணி ஒன்றில் போட்டியிடுவதே சிறந்ததென்று, நியாஸ் பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து பேசியபோது, அதனை மறுத்த புத்தளம் நகரபிதா பாயிஸ், “இல்லை, முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்” என்று வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக இருவருக்குமிடையே வாக்குவாதங்களும், கடுமையான சொற்பிரயோகங்களும் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.
“முஸ்லிம் காங்கிரஸ் புத்தளத்தில் தனித்துக் களமிறங்க வேண்டுமென, பாயிஸ் வலியுறுத்துவதும் அடம்பிடிப்பதும் மொட்டுக்கட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயாகும். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், புத்தளத்தில் மொட்டுக் கட்சி தனியாகவும், யானைக் கட்சி தனியாகவும், சஜித் தலைமையிலான கூட்டமைப்பு தனியாகவும் களமிறங்கும்போது, அந்தக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்கள் இடம்பெறுவர். இந்த சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸும் மரச் சின்னத்தில் தனித்துக் களமிறங்கினால், மக்கள் காங்கிரஸும் தனித்தே களமிறங்கும். எனவே, முஸ்லிம்களின் வாக்குகள் ஐந்து கட்சிகளுக்கு பிரியும்போது, மொட்டுக் கட்சியினருக்கே அது சாதகமாக அமையும். அதன்மூலம், புத்தளம் மாவட்டத்தில் மொட்டுக் கட்சிக்கு 06 எம்.பிக்களை பெற்றுக்கொடுப்பதே பாயிஸின் திட்டமாகும்” இவ்வாறு நியாஸ் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி புத்தளம் மிரர்