குதிகால் உயரமான செருப்பு அணிய ஜப்பானில் பெண்களை கட்டாயப்படுத்தலாமா? - ஜப்பான் பிரதமர் பதில்


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
ப்பானில் வேலைக்கு செல்கிற பெண்கள் குதிகால் உயரமான செருப்புகளை (ஹீல்ஸ்) அணிய வேண்டும் என்று விதியுள்ளது.

இது குறித்து ஜப்பானின் பிரதமரான ‌ஷின்சே அபேயிடம் இது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது.
குறிப்பாக, வேலைக்கு செல்கிற ஜப்பானில் பெண்கள் குதிகால் உயரமான செருப்புகளை அணிய வேண்டும் என்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் இயக்கம் உருவாகியுள்ளதே, இதில் உங்கள் கருத்து என்ன?’’ என ஜப்பானின் பிரதமரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ‘‘நடைமுறைக்கு ஒவ்வாத ஆடை, அணிகலன்களை பெண்கள் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது’’ என பதிலளித்தார்.

அதே நேரத்தில், ‘‘தனியார் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள சட்டங்கள் மீது அரசாங்கம் முடிவு எடுப்பது என்பது கடினமான காரியம். இது குறித்து சம்மந்தப்பட்ட தரப்பினருடன்தான் கூடுதல் விவாதம் நடத்த வேண்டும்’’ என்றும் ஜப்பான பிரதமர் கருத்து தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -