அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பில் ஜெயசிறிலை களமிறங்குமாறு மக்கள் வேண்டுகோள்.

காரைதீவு  சகா-
ம்பாறை மாவட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புப் பட்டியலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் களமிறங்கவேண்டுமென பொதுமக்கள்வேண்டுகோள் விடுத்தவண்ணமுள்ளனர்.

தேர்தல் காலமென்றிராது சகல காலகட்டத்திலும் மக்களோடு மக்களாக நின்று சேவையாற்றக்கூடிய இளம் தலைவர்தான்எமக்குத்தேவை. அம்பாறை மாவட்டத்தின் சகல தமிழ்ப்பிரதேசங்களிலும் பல்வேறு சேவையாற்றி என்றும் மக்களோடு நிற்கின்ற ஜெயசிறில் களமிறக்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாவட்டத்தின்பலபாகங்களிலுமிருந்து தினமும் முக்கிய பிரமுகர்கள் காரைதீவுக்கு வந்து தவிசாளரிடம் அவர்போட்டியடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

மக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாகக்கூறுகின்ற போதிலும் அவர் இன்னும் எந்த தீர்மானத்தை எடுக்கவில்லையென்று தெரியவருகின்றது.

வடகிழக்கின் ஏனைய மாவட்டங்களைவிட அம்பாறை மாவட்டத்தின் புவியியல்நிலை தமிழ்மக்களின் சமகால சவால்கள் என்பன வேறுபட்டன என்பதை யாவரும்அறிவார்கள். எனவே வீரவசனங்களை மாத்திரம் பேசிக்கொண்டிராது செயலிலும் ஈடுபடவேண்டும் அதற்குப்பொருத்தமானவர் ஜெயசிறில் என்பதால் அவரை களமிறங்குமாறு கேட்டுள்ளோம் என மக்கள்கூறுகின்றனர்.

அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்போதிலும் முடியவில்லை .

இதேவேளை இதுவரை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புசார்பில் வேட்பாளர்களாக வரக்கூடும் என்றபட்டியலில் முன்னாள் எம்.பி.க.கோடீஸ்வரன் திருக்கோவில் இளம்சமூகசேவையாளர் இ.சயனொளிபவன் இ.த.கட்சியின் நீண்டகால உறுப்பினர் டாக்டர் தமிழ்நேசன் கல்முனையில் நீண்டகால கல்விச்சேவையாளர் எந்திரி க.கணேஸ் இளம் சேவையாளர்இ.பிரதீபன் நாவிதன்வெளிப்பிரதேசசபைத்தவிசாளர் த.கலையரசன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

நாவிதன்வெளிப் பிரதேசபைத்தவிசாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான த.கலையரசனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது மக்களும் கட்சியும் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் தான்இன்னும் எதுவித முடிவும் எடுக்கவில்லையெனத் தெரிவித்தார். எதிர்வரும் 12ஆம் திகதிதான் சகலதும் தெரியும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை தமிழர் சார்பில் முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன்(கருணா) தலைமையிலான மாற்றுஅணியொன்று இறங்கவுள்ளது.ஆனால் உதயசூரியன் சின்னத்திலா அல்லது வேறு சின்னத்திலா என்பதுஇன்னும் தெளிவாகத்தெரியவில்லை.

மக்கள் இன்னும் தேர்தலையிட்டுபெரிதாகஅலட்டியதுபோன்று தெரியவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -