வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்பின் பல பகுதிகளிலும் தொழில் புரிந்த நிலையில் தொடர்ச்சியான பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினால் சொந்த ஊர்களுக்குத் திரும்பாமல் தற்காலிக தங்குமிடங்களில் இருக்கும் மலையக இளைஞர், யுவதிக ளுக்கான வாழ்வாதார உதவிகளை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் மற்றும் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரும் இணைந்து வழங்கி வருகின்றனர்.
கொரோனா தொற்றின் தீவிர நிலை அறிந்து மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ள நிலையில் அதனை ஏற்று பல மலையக இளைஞர் யுவதிகள் தங்களது தற்காலிக தங்குமிடங்களில் பாதுகாப்பாக வசித்து வருகின்றனர்.
இந் நிலையில் மருதானை, புறக்கோட்டை, கொச்சிக்கடை, ஜிந்துபிட்டி போன்ற பகுதிகளில் வசித்து வரும் மலையக இளைஞர் யுவதிகளுக்கான வாழ்வாதார உதவித் தொகை பழனி திகாம்பரம் மற்றும் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் உள்ள மிகவும் அவசியமான உதவிகள் தேவைப்படும் நபர்கள் விஜய்- 0774-363897, ஸ்ரீதர்-0778-385577 - ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும்.
இதேபோன்று மலையக பெருந்தோட்ட பகுதிகளில் சிரமங்களை எதிர்கொண்டு வரும் மிகவும் கஸ்டப் பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
